ஆப்நகரம்

ரயில் போர்வைகளை மாதம் 2 முறை துவைக்க ரயில்வே முடிவு

ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகளை இனி மாதம் இரண்டு முறை துவைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 11:20 am
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும்போர்வைகளை இனி மாதம் இரண்டு முறை துவைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
Samayam Tamil railway-em3


ரயில்களில் ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு தலையணை, போர்வை மற்றும் கம்பிளி வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த போர்வைகள் சரியாக துவைக்கப்படவில்லை என்று ரயில் பயணிகள் புகார் தெரிவித்தனர். அதேபோல் சிஏஜி அறிக்கையில் சில போர்வைகள் 6 மாதங்களுக்கு ஒரு முறைதான் துவைக்கப்படுகிறது என தகவல் வெளியானாது.மேலும் வடமாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் போர்வைகள் பல ஆண்டுகள் துவைக்கப்படவில்லை என்றுசெய்திகள் வெளியானது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி கூறியதாவது :

‘ரயிலில்ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு போர்த்திக்கொள்ள கம்பளிமற்றும் போர்வை வழங்கப்படுகிறது. இவை 2 மாதத்துக்கு ஒரு முறைதான் துவைக்கப்படுகின்றன. இதனால் போர்வைகள்துர்நாற்றம் வீசுவதாக , பயணிகள் சிலர் புகார் தெரிவித்தனர். எனவே, மாதத்துக்கு 2 முறை துவைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கம்பளி மற்றும் போர்வைகள்கனமாக உள்ளதால் அடிக்கடி துவைக்க முடியாது. எனவே, இதற்கேற்ப புதிய கனம் குறைவான, லேசான கம்பெளிகள் வாங்கப்படஉள்ளன. இவை கம்பளி மற்றும் நைலான் கலந்ததாக இருக்கும். மாதம் 2முறை துவைப்பதற்கு ஏற்ற போர்வைகள்வாங்கினால் பயன்பாட்டுசெலவு இரண்டு மடங்காகிவிடும்.நாடு முழுவதும் ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு , 3.9 லட்சம் கம்பெளி மற்றும் போர்வைகள் வழங்கப்படுகின்றன.

ஏசி முதல் வகுப்பு பயணிகளுக்கு ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் போர்வைமாற்றப்படுகிறது. ஆனால் 2 அடுக்கு ஏசி மற்றும் 3 அடுக்கு ஏசி பெட்டிகளில்பயணிப்போருக்கு இந்த வசதி இல்லை.கம்பெளி, போர்வைகளை துவைக்க இயந்திர மயமாக்கப்பட்ட 50 சலவைக் கூடங்கள் உள்ளன. தற்போது மேலும் 10 சலவை கூடங்கள் உருவாக்கப்பட உள்ளன’.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி