ஆப்நகரம்

இனி ரயில் நிலையத்தில் உணவுக்குப் பஞ்சமில்லை!

ரயில்கள் இயக்கம் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அடுத்த அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது...

Samayam Tamil 20 May 2020, 9:57 pm
ரயில் நிலையங்களில் உணவகங்கள், புத்தக நிலையங்கள், மருந்துக் கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil இனி ரயில் நிலையத்தில் உணவுக்குப் பஞ்சமில்லை!
இனி ரயில் நிலையத்தில் உணவுக்குப் பஞ்சமில்லை!


நாட்டில் ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பில் உள்ள தளர்வுகளைச் சுட்டிக்காட்டிப் பல நிறுவனங்கள், அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கிவிட்டன. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று, " ஜூன் ஒன்று முதல் ஏசி வசதி இல்லாத 200 பயணிகள் ரயில் இயக்கப்படும்" என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

ரயில்வே அமைச்சகம்


இப்போது இந்த கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளபட வேண்டும். சமைத்த உணவு விற்கவும் இப்போது அனுமதி வழங்கப்படுகிறது.

ஜூன் 1 முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்: இந்த முறை டிக்கெட் ரேட் கம்மி!

அதே வேளையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. கடைகளில் பார்சல் உணவுகள் விற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய ரயில்வே நாடு முழுவதிலும் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்கச் சிறப்பு ரயில்களை இயக்கியது.

மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் காரணமாக ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி