ஆப்நகரம்

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்: பதவியை பிடிக்க கடும் போட்டி

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் பதவியை பிடிக்க ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Samayam Tamil 9 Aug 2018, 10:27 am
மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் பதவியை பிடிக்க ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Samayam Tamil Rajya Sabah


மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்த பி.ஜெ.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம்தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்த பதவிக்கான தோ்தல் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிா்க்கட்சிகள் சாா்பில் தங்கள் ஆதரவு வேட்பாளரின் பெயா் மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் ஹரி பிரசாத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவு இருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஹரிவன்ஷூக்கு சிவசேனாவும், அகாலிதளமும் ஆதரவு தொிவித்துள்ளன. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத அ.தி.மு.க., தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளும் அதரவு தொிவித்துள்ளன.

அடுத்த செய்தி