ஆப்நகரம்

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Feb 2018, 10:17 pm
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil rajya sabha elections 2018 date announcement
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!


245 இருக்கைகளை கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவைக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் 12 பேர் கவுரவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். மீதி 233 பேர், ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதில் 16 மாநிலங்களைச் சேர்ந்த, 58 மாநில உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது. இந்நிலையில், 16 மாநிலங்களில் இருந்து 57 புதிய உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 57 உறுப்பினர்களை தவிர, கடந்த டிசம்பர் மாதம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த வீரேந்திர குமாரின் இடத்துக்கு மேலும் ஒரு உறுப்பினரை தேர்வு செய்யவும் இதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் இன்றிரவு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி