ஆப்நகரம்

கண்ணீருடன் ராஜ்ய சபாவில் இருந்து விடைபெற்ற தமிழக எம்.பிக்கள்!

தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வான எம்.பிக்கள் இன்றுடன் விடைபெற்றனர்.

Samayam Tamil 24 Jul 2019, 12:29 pm
நாடாளுமன்றத்தின் மேலவை என்று அழைக்கப்படும் ராஜ்ய சபாவிற்கு மாநில எம்.எல்.ஏக்கள், மக்களவை எம்.பிக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
Samayam Tamil Parliament


தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ராஜ்ய சபாவிற்கு 6 பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் தேர்வாகினர்.

இதில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையொட்டி தனது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மீதமுள்ள 5 எம்.பிக்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கர்நாடகாவை அடுத்து மத்திய பிரதேசத்திலும் ஆட்சி மாற்றமா? அதிரடி பிளானில் பாஜக!

இதையொட்டி இன்று காலை ராஜ்ய சபா கூடியதும் சபாநாயகரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு, ஓய்வு பெறும் எம்.பிக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பிரதமருடன் ஆலோசித்த பின்னர் ஆட்சி உரிமை கோரப்படும் – எடியூரப்பா

இந்த அவை ஓய்வு பெறும் எம்.பிக்களின் சிறப்புமிக்க பேச்சை, முற்போக்கான கருத்துகளை தவறவிடுவதாக குறிப்பிட்டார். இதையடுத்து பல்வேறு எம்.பிக்களும் ஓய்வு பெறும் எம்.பிக்களை பாராட்டி பேசினர்.

மீண்டும் ஜனநாயகத்திற்கு அடி... கவிழ்ந்தது குமாரசாமி அரசு!

முன்னதாக தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுகவில் இருந்து தலா 3 புதிய எம்.பிக்கள் ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி