ஆப்நகரம்

ராமர் கோவில் அடிக்கல்: தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிகழ்வு - பிரியங்கா காந்தி!

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.

Samayam Tamil 5 Aug 2020, 6:22 am
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழா குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஒருவரான பிரியங்கா காந்தி கூறுகையில், இந்திய துணைக் கண்டத்தில் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தின் ஒற்றுமையில் ஸ்ரீராமர் இடம்பிடித்துள்ளார். இவர் அனைவருக்கும் உரியவர்.
Samayam Tamil Priyanka Gandhi


அனைத்து தரப்பினருக்கும் வாழ்விடம் அளித்தவர். எல்லா மக்களின் நலனை விரும்பியவர். ஸ்ரீராமரின் அருளால் அயோத்தியில் நடைபெறும் விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாக அமையட்டும்.

இன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி?

ராமரின் குணநலன்களை வால்மீகி, கம்பன், கபிர், துளசிதாஸ் உள்ளிட்ட ஏராளமான புலவர்கள் மிகவும் அற்புதமான வார்த்தைகளால் விவரித்துள்ளனர். தைரியம், எளிமை, கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ஸ்ரீராமரின் சாராம்சமாகும்.

வடக்கிலிருந்து தெற்காக, கிழக்கிலிருந்து மேற்காக ராமரின் கதைகள் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டு வந்துள்ளன. இந்திய துணைக் கண்டத்திலும், உலக கலாச்சாரத்திலும் மிகவும் ஆழமான, அழியாத தடத்தை ராமாயணம் பதிவு செய்துள்ளது.

ஸ்ரீராமர், அன்னை சீதாவின் கதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சார மற்றும் மத உணர்வுகளை ஒளிர்விடச் செய்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி