ஆப்நகரம்

Franco Mulakkal: கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு; 3 நாட்கள் விசாரணைக்கு பின் பேராயர் பிராங்கோ கைது!

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில், பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 21 Sep 2018, 6:35 pm
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலத்தில் பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் கன்னியாஸ்திரி ஒருவரை, கடந்த 2014 - 2016 வரை பல முறை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
Samayam Tamil Kerala


ஆனால் பிராங்கோ மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தேவாலய நிர்வாகத்தைக் கண்டித்தும், போலீசைக் கண்டித்தும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்தே போலீசார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். கடந்த 19ஆம் தேதி பேராயர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதற்கிடையில் கேரள உயர்நீதிமன்றத்தில் பிராங்கோ முன் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

இதன் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனைத் தொடர்ந்து பிராங்கோவை சிறப்பு விசாரணைக்குழு தீவிரமாக விசாரித்தது. தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணையில், பேராயர் பிராங்கோ இன்று கைது செய்யப்பட்டார்.

Rape-accused priest Franco Mullakkal arrested.

அடுத்த செய்தி