ஆப்நகரம்

பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது: மத்திய அமைச்சர்

பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் துரதிஷ்டமானவை என்றாலும் அவற்றைத் தடுக்க முடியாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Apr 2018, 2:45 pm
டெல்லி: பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் துரதிஷ்டமானவை என்றாலும் அவற்றைத் தடுக்க முடியாது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.
Samayam Tamil Santosh-Kumar-PTI.


ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் இது குறித்து கருத்து கூறினார்.

“இது போன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடப்பது துரதிஷ்டவசமானது; ஆனால் அவற்றைத் தடுக்க முடியாது. அரசு அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிரண்டு இடங்களில் அப்படி நடந்துவிட்டால் அதை பெரிதுபடுத்தக்கூடாது.” என்று அவர் கூறினார்.

இதனிடையே, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எதிரொலியாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த செய்தி