ஆப்நகரம்

பணமதிப்பு நீக்கம் பின்னணியை உடைக்கத் தயார்: நாள் குறித்த உர்ஜித் படேல்

வரும் ஜூன் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்று ரிசர்வ வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

TNN 22 May 2017, 2:33 pm
வரும் ஜூன் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் தொடர்பான விளக்கம் அளிக்கப்படும் என்று ரிசர்வ வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
Samayam Tamil rbi governor urjit patel to brief parliamentary panel on demonetisation on june 8
பணமதிப்பு நீக்கம் பின்னணியை உடைக்கத் தயார்: நாள் குறித்த உர்ஜித் படேல்


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாதங்களுக்குப்பின் நிலைமை சீரடைந்துள்ளது.

இருப்பினும் இன்னமும் புதிய ரூபாய் நோட்டுகள் ஒழுங்காக அச்சிடப்படாமலும் போலியாகவும் கிழிந்தும் செல்லாத நோட்டுகளாக பல ஏடிஎம் மையங்களில் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் தொடர்பாக நிதித்துறையின் கீழான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

மீண்டும், பல கேள்விகளுக்கு உர்ஜித் படேல் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியது. மே 25ஆம் தேதி ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியது. அன்றைய தினம் தன்னால் வர முடியாது என்பதால் ஜூன் 8ஆம் தேதி ஆஜராக அனுமதிகோரினார் உர்ஜித் படேல். இதனை ஏற்ற நிலைக்குழு அவரை ஜூன் 8ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க அனுமதித்துள்ளது.

அடுத்த செய்தி