ஆப்நகரம்

அளவுக்கு அதிகமான பாரத்துடன் 500,1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றிச்சென்ற லாரிக்கு அபராதம்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், அவற்றை மக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.

TNN 24 Dec 2016, 12:49 pm
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், அவற்றை மக்கள் வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். அந்த ரூபாய் நோட்டுகளை லாரியில் ஏற்றப்பட்டு ரிசர்வங்கிக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
Samayam Tamil rbis container carrying scrapped notes fined for overloading
அளவுக்கு அதிகமான பாரத்துடன் 500,1000 ரூபாய் நோட்டுகளை ஏற்றிச்சென்ற லாரிக்கு அபராதம்


இவ்வாறு மக்களிடமிருந்து பெறப்பட்ட பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர் லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டது.

அந்த கண்டெய்னர் லாரியை கடந்த 20ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், கொண்டியா மாவட்டத்தில் உள்ள தியோரியில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு எடை பார்க்கப்பட்டது. அப்போது கண்டெய்னர் லாரிக்கு அனுமதிக்கப்பட்ட 16 டன் எடைக்கு பதிலாக 21 டன் அளவுக்கு பாரத்தை ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனால அதிகமாக இருந்த 5 டன் எடைக்காக ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கினர். அபராதம் செலுத்திய பின் நாக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்த செய்தி