ஆப்நகரம்

காவிரி நதிநீர் பங்கீடு பேச்சுவார்த்தைக்குத் தயார்: குமாரசாமி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Jun 2018, 4:09 pm
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil CM-kVLF--621x414@LiveMint-k0J--621x414@LiveMint


கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்கு கர்நாடகா செல்லவில்லை என்றும் காவிரி தொடர்பாக பேசப் போவதாகவும் தனது சந்திப்பு பற்றி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்துள்ளார். சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த அவர், “காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கர்நாடக அரசு மதித்து நடக்கும் என்ற நம்பிக்கையை இந்தச் சந்திப்பு அளித்திருக்கிறது” என்றார்.

மேலும், நீண்ட கால நட்பின் தொடக்கமாக இது அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். “இது தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை அல்ல. மக்கள் நலம் குறித்த சந்திப்பு” என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பின்பும் அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அடுத்த செய்தி