ஆப்நகரம்

பதறவைக்கும் ஹத்ராஸ் சம்பவம்: லேட்டஸ்ட் நிலவரம் என்ன?

இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் சமீபத்திய நிலவரம் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 5 Oct 2020, 7:56 am
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதான இளம் தலித் பெண், வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டிய மூத்த காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சமீபத்திய நிலவரம் குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil Hathras Case Updates


பாஜக எம்.எல்.ஏ வீட்டில் அவசர ஆலோசனை

ஹத்ராஸ் தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ராஜ்விர் சிங் பெகால்வன் வீட்டில் நேற்று பலரும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் இளம் தலித் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவமதிக்கப்பட்ட ராகுல் காந்தி: உரிமை குழு விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!

இதில் ஆதிக்க சாதியினர் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிபதி தலைமையில் விசாரணை, ஒய் பிரிவு பாதுகாப்பு

பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனில் அவர்களை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவேன். நடிகை கங்கனா ரணாவத் ஒய் பிரிவு பாதுகாப்பு பெறும் போது, இந்த குடும்பத்தினருக்கு ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

திடீர் உடல்நலக்குறைவு, எஸ்.ஐ.டி முக்கிய கோரிக்கை

ஹத்ராஸில் இளம்பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து சிறப்பு விசாரணைக் குழு நேற்று விசாரணை நடத்தியது. குடும்பத்தினரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அப்போது உயிரிழந்த பெண்ணின் தந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் குழு உடனே விரைந்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் வருகை புரிந்து பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி