ஆப்நகரம்

ரெட்டி மகள் திருமண செலவு ரூ.30 கோடி? முடிவுக்கு வரும் வழக்கு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ரெட்டி மகளின் திருமண செலவு குறித்த விவகாரம் முடிவுக்கு வரவுள்ளது.

Bangalore Mirror Bureau 11 Jan 2017, 3:08 pm
பெங்களூரு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ரெட்டி மகளின் திருமண செலவு குறித்த விவகாரம் முடிவுக்கு வரவுள்ளது.
Samayam Tamil reddy wedding splurge cost only rs 30 crore
ரெட்டி மகள் திருமண செலவு ரூ.30 கோடி? முடிவுக்கு வரும் வழக்கு


பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் க‌டந்த 2008-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். சுரங்க மோசடி வழக்கில் சிக்கி கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டத்துக்கு விரோதமாக சுரங்கம் அமைத்து ரூ.50 ஆயிரம் கோடி வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. இவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனையில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட், எல்சிடி வடிவில் திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம்பெற்ற, இந்த பிரமாண்ட திருமணம் அனைவராலும் பல நாட்கள் பேசப்பட்டு வந்தது.

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாட்களில் நடைபெற்ற இந்த திருமணத்தின் செலவு ரூ.150 கோடி முதல் ரூ.500 கோடி வரை இருக்கலாம் என கூறப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தை வருமான வரித்துறை கையில் எடுத்து விசாரித்தது.

இந்நிலையில், தனது மகளின் திருமண செலவுக்கு ரூ.30 கோடி செலவு செய்ததாகவும், அதற்கான ஆதாரங்களையும் ரெட்டி சமர்ப்பித்துள்ளார்.

நாங்கள் சுமார் ரூ.45 கோடி செலவாகியிருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ரூ.30 கோடி தான் செலவானது என்று கூறும் அவர், அதற்கான கணக்குகளையும் வைத்துள்ளார். எனவே, இந்த வழக்கு கூடிய விரைவில் மூடப்பட்டு விடும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
REDDY WEDDING SPLURGE COST ONLY RS 30 CRORE?

அடுத்த செய்தி