ஆப்நகரம்

போலீசைக் கல்லால் அடிக்கும் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல்.. திருப்பதியில் தொடர் சம்பவங்கள்

திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 4 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலீசார் மீது கற்கள் வீசி தப்பிக்க முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 16 Oct 2019, 5:18 pm
திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 4 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போலீசார் மீது கற்கள் வீசி தப்பிக்க முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil redwood smugglers attacking police in andra
போலீசைக் கல்லால் அடிக்கும் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல்.. திருப்பதியில் தொடர் சம்பவங்கள்

திருப்பதியை அடுத்த சின்ன நாயுடு பாளையம் வனப்பகுதி வனதுறைக்குசொந்தமானது. இந்தப்பகுதியில் செம்மரக்கடக்கடத்தல் நடப்பது தொடர்ந்து வருகிறது. இந்தப் பகுதியின் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வனப்பகுதியில் இன்று ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, செம்மரக் கடத்தல் கும்பல்கள் வழக்கமாக பயன்படுத்தும் பாதையில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, செம்மரக் கூலிகள் சிலர் செம்மரக் கட்டைகளை சுமந்து செல்வதை போலீசார் கண்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது செம்மரக் கூலிகள் இணைந்து போலீசார் மீது கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்றனர். இதனை அடுத்து அவர்களை சுற்றி வளைத்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அனைவரையும் கைது செய்தனர். .

விசாரணையின்போது, பிடிபட்டவர்கள் அனைவரும் திம்மா நாயுடு பாளையத்தைச் சேர்ந்த ரமனய்யா புதலபட்டு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இதில் சிலர் முன்னாள் செம்மர கடத்தல் கூலிகள் என்பதும் தெரியவந்து.

தொடர்ந்து அவர்களை கைது செய்த செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அவர்கள் கடத்த முயன்ற ரூபாய் 10 லட்சம் பெருமானமுள்ள நான்கு செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து உள்ளனர்.

மேலும் விசாரணையின்போது பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி