ஆப்நகரம்

வீரதிரச் செயலுக்கான விருதுகள் அறிவிப்பு... விருதுகளை அள்ளியிருக்கும் ஜம்மு காஷ்மீர் ‘மாநிலம்’...

வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதை இந்த ஆண்டு 4 பேர் மட்டுமே பெறுகின்றனர். இதில் சி.ஆர்.பி.எஃப். பிரிவுக்கு ஒரு விருது போக, மீத 3 விருதுகளும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த போலீசாருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 25 Jan 2020, 3:05 pm
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 71ஆவது ஆண்டை இந்த எட்டுகிறது.
Samayam Tamil President-Police-Medal


ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நாடெங்குமுள்ள காவல்துறையினரில் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதை இந்த ஆண்டு 4 பேர் மட்டுமே பெறுகின்றனர். இதில் சி.ஆர்.பி.எஃப். க்கு ஒரு விருது போக, மீத 3 விருதுகளும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த போலீசாருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

துணிச்சலுக்கான காவல்துறைப் பதக்கங்களை இந்தியா முழுதும் இந்த ஆண்டு மொத்தம் 286 பேர் பெறுகின்றனர். இதில் தமிழ்நாட்டுக்கு ஒரு விருதும் கிடையாது.

அதேபோல, சிறப்பான சேவைக்கான குடியரசுத்தலைவரின் விருது 93 பேருக்கும் (தமிழ்நாடு-3), பாரட்டுதலுக்குரிய சேவைக்கான காவலருக்கான விருது 657 பேருக்கும் (தமிழ்நாடு 21) வழங்கப்படவிருக்கிறது.

இதில் 2020ஆம் ஆண்டுக்கான அதிகமான விருதுகளைப் பெறும் ‘மாநிலமாக’ ஜம்மு காஷ்மீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி