ஆப்நகரம்

தவளைகளிடமிருந்து வைரஸ் காய்ச்சலை தடுக்கும் மருந்துகள் : ஆய்வில் தகவல்

தவளைகளிடமிருந்து வைரஸ் காய்ச்சல்களை தடுக்கும் மருந்துகள் தயாரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

TNN 20 Apr 2017, 4:41 pm
தவளைகளிடமிருந்து வைரஸ் காய்ச்சல்களை தடுக்கும் மருந்துகள் தயாரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
Samayam Tamil researchers use frog mucus to fight the flu
தவளைகளிடமிருந்து வைரஸ் காய்ச்சலை தடுக்கும் மருந்துகள் : ஆய்வில் தகவல்



தென்னிந்திய பகுதிகளில் காணப்படும் தவளைகளிடம் ஆராய்சியாளர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கேளர மாநிலத்தில் காணப்படும் தவளையின் சளிப்படலத்தில் இருந்து சுரக்கும் திரவமானது வைரல் காய்ச்சலை தடுக்கும் வல்லமைப் பெற்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய ஆய்வின்படி, தென்னிந்தியாவில் வாழும் தவளைகளின் த திரவத்தினை கொண்டு வைரஸ் தொடர்பான பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்க முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் காணப்படும் ஹைட்ரோஃபிளாஸ் பேஹுவிஸ்தாரா என்ற தவளை இனங்களை கொண்டு மனிதர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கமுடியும், வைரஸ் பாதிப்பில் இருந்தும் மனிதர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சர்வதேச ஆராய்ச்சி குழுவில் கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Researchers use frog mucus to fight the flu

அடுத்த செய்தி