ஆப்நகரம்

டோக்லாம் விவகாரம் ஓயாது: சீன ஊடகம் திட்டவட்டம்

டோக்லாம் விவகாரம் நீண்ட காலத்திற்கு ஓயாது என்று சீன நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 9 Oct 2017, 1:23 pm
டோக்லாம் விவகாரம் நீண்ட காலத்திற்கு ஓயாது என்று சீன நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil road construction by beijing in doklam will be a long term trend says chinese media
டோக்லாம் விவகாரம் ஓயாது: சீன ஊடகம் திட்டவட்டம்


சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ளது டோக்லாம் பீடபூமி. இப்பகுதிக்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதில், இந்தியா பூடானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டன. இதனால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டோக்லாம் பகுதியில் பதற்றம் நிலவியது. இரு நாட்டு தூதரகங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஆகஸ்ட் 28ஆம் தேதி எல்லையில் நிறுத்தப்பட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கிருந்து அகன்றனர்.

இதற்குப் பின் டோக்லாம் பகுதியில் சற்று அமைதி திரும்பிய நிலையில், சில தினங்கள் முன்பாக சீனா ராணுவத்தின் துணையுடன் டோக்லாமில் சாலை போடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக, டோக்லாம் சும்பி பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் டோக்லாம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில், சீனாவைச் சேர்ந்த் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் நாளிதழ் கடந்த வாரம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்றில், டோக்லாம் விவகாரம் நீண்ட காலத்திற்கு ஓயாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்லாம் சாலை போடும் பணிக்கு இந்தியா காட்டும் எதிர்வினைகள் விசித்திரமாக இருப்பதாகக் கூறும் அக்கட்டுரையில், இந்திய சமூகம் 'சித்தபிரமை பிடித்தது', 'உணர்ச்சி வசப்படுவது' 'திமிர்பிடித்தது' என்றும் கூறப்பட்டுள்ளது.

டோக்லாம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீன அரசின் கண்காணிப்பில் உள்ளது. சாலை அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளை அங்கே ஏற்படுத்தும் பணி நீண்ட காலத்திற்கு அங்கே நடக்கும் என்றும் அந்த கட்டுரை தெரிவிக்கிறது.

அடுத்த செய்தி