ஆப்நகரம்

யார் இவர்கள்? ஏன் இப்படி? மூட்டை, மூட்டையாக வெங்காயத்தை திருடும் மர்ம நபர்கள்!

வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், கும்பல் ஒன்று வெங்காயத்தை திருடும் செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Samayam Tamil 27 Nov 2019, 11:27 am
வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், கும்பல் ஒன்று வெங்காயத்தை திருடும் செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Samayam Tamil robbers stole 10 sacks of onion in west bengal
யார் இவர்கள்? ஏன் இப்படி? மூட்டை, மூட்டையாக வெங்காயத்தை திருடும் மர்ம நபர்கள்!


விளைச்சல் பாதிப்பு

நாடு முழுவதும் பருவமழை காரணமாக பல்வேறு பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது வெங்காயம். கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெங்காய திருட்டு

இந்த சூழலில் வெங்காயத்தை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆம்! அப்படியொரு சம்பவம் மேற்குவங்கத்தில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஹல்டியா அருகே பசுதேவ்பூரில் ஷா பஸார் அமைந்துள்ளது.

தீயாய் பரவும் செய்தி

இங்கு அக்‌ஷய் தாஸ் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் கடந்த திங்கள் அன்று இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10 வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.50,000 என்று கூறப்படுகிறது. இந்த செய்தி நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது.

எங்கே போனது வெங்காயம்?

தற்போது மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ஒன்று ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வெங்காய திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெங்காயம் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், ஏன் திருடினார்கள், யார் திருடினார்கள் என்றும் தெரியவில்லை.

வெங்காயத்திற்கு பாதுகாப்பு

இதுபற்றி போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களிலும் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காயத் திருடர்கள்

வழக்கமாக வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளை தான் திருடர்கள் அள்ளிச் செல்வர். ஆனால் தற்போது தங்கத்திற்கு ஈடாக விற்கப்படும் வெங்காயத்தை திருடும் செயல்கள் அதிகரித்துள்ளன.

அடுத்த செய்தி