ஆப்நகரம்

1996-ல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு டெல்லியில் தடை

கடந்த 1996ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் ரகக் கார்களை தலைநகர் டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 10 Jun 2017, 4:28 pm
கடந்த 1996ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் ரகக் கார்களை தலைநகர் டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rolls royce 1996 model cant ply in delhi says ngt
1996-ல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு டெல்லியில் தடை


காற்று மாசு காரணமாக, டெல்லியில் பெட்ரோல் வாகனங்களை இயக்கக் கடுமையான விதிமுறைகளை உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளன. குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் கார்களை டெல்லியில் பயன்படுத்தக்கூடாது என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி, தேசிய பசுமை தீர்ப்பாயமும், பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை கடுமையாகக் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த அசோக் குமார் ஜெயின் என்பவர், கடந்த 1996ம் ஆண்டு தயாரிப்பான ரோல்ஸ் ராய்ஸ் காரின் பதிவெண்ணை புதுப்பிக்க அனுமதி கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காரின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜவாத் ரகீம் தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு விரோதமான கோரிக்கையை காரின் உரிமையாளர் முன்வைப்பதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

கார் தயாரித்து, 15 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியாது. சில பாரம்பரிய கார்களுக்கு மட்டும் விதிமுறைகளில் இருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாகவே அந்த அனுமதி தரப்பட்டதாகவும், அதுபோன்று ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளர் விரும்பினால் சுற்றுலா பயன்பாட்டுக்கு வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், போக்குவரத்து பயன்பாட்டுக்கு, 1996ல் தயாரித்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அனுமதிக்க முடியாது என்று, நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த உத்தரவு, அதே காலத்தில் தயாரிக்கப்பட்ட மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A Rolls Royce car owner was denied permission from NGT to renew his vehicle registration for the petrol-driven model which was bought by him in 1996.

அடுத்த செய்தி