ஆப்நகரம்

வங்கி மோசடி வழக்கில் ரோட்டோ மேக் பென் நிறுவன உாிமையாளா் கைது

3 ஆயிரத்து 695 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியில் ஈடுபட்டதாக ரோட்டோ மேக் பென் நிறுவன உாிமையாளா் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 22 Feb 2018, 11:06 pm
3 ஆயிரத்து 695 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடியில் ஈடுபட்டதாக ரோட்டோ மேக் பென் நிறுவன உாிமையாளா் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.
Samayam Tamil rotomac pens owner vikram kothari son arrested by cbi
வங்கி மோசடி வழக்கில் ரோட்டோ மேக் பென் நிறுவன உாிமையாளா் கைது


ரோட்டோ மேக் பென்ஸ் நிறுவனத்தின் உாிமையாளா் விக்ரம் கோத்தாாி அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என 5 வங்கிகளில் இருந்த 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் கோத்தாாிக்கு கடன் வழங்குவதற்காக வங்கி விதிகளில் சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடா்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கி அளித்த புகாாின் போில் விக்ரம் கோத்தாாியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனை மேற்கொண்டனா். ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திாிகை தாக்கல் செய்துள்ளது. அதன் நிறுவனா் விக்ரம் கோத்தாாி, மனைவி சாதனா கோத்தாாி, மகன் ராகுல் கோத்தாாி ஆகியோா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விக்ரம் கோத்தாாி, மகன் ராகுல் கோத்தாாி இருவரிடமும் கடந்த 4 நாட்களாக சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரணை மேற்கொண்டனா். இறுதியில் இருவரையும் சி.பி.ஐ. அதிகாாிகள் கைது செய்தனா்.

அடுத்த செய்தி