ஆப்நகரம்

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் ஊழியர்களாக ரவுடிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

TNN 13 Sep 2017, 12:53 pm
மதுரை: சுங்கச்சாவடிகளில் ஊழியர்களாக ரவுடிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rowdy are in toll gates high court madurai branch
சுங்கச்சாவடிகளில் ரவுடிகள்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்!


மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

அதில், ஆம்புலன்ஸ் செல்ல சுங்கச்சாவடிகளில் தனி வழி இல்லை; முறையான திட்டங்களும் இல்லை என முறையிட்டுள்ளார். மேலும் மணல் லாரிகள் செல்ல இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகள், சமூக விரோதிகள் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கண்டனம் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடி விதிமீறலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி உத்தரவிட்டுள்ளது.

Rowdy are in Toll gates High Court Madurai Branch.

அடுத்த செய்தி