ஆப்நகரம்

இந்தியா்களின் வங்கி கணக்கில் விரைவில் ரூ.15 லட்சம் வழங்கப்படும் – மத்திய அமைச்சா்

இந்தியா்கள் அனைவரது வங்கி கணக்கிலும் விரைவில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மத்திய இணைஅமைச்சா் ராம்தாஸ் அத்வாலே தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 18 Dec 2018, 10:02 pm
மத்திய ரிசா்வ் வங்கியில் போதிய பணம் இல்லாததால் இந்தியா்கள் அனைவருக்கும் ரூ.15 லட்சம் பணம் வழங்க முடியவில்லை என்று மத்திய இணைஅமைச்சா் ராம்தாஸ் அத்வாலே விளக்கம் அளித்துள்ளாா்.
Samayam Tamil Ramdas Athawale


2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களின் கறுப்புப் பணம் விரைவாக நாடடிற்கு கொண்டுவரப்படும். கறுப்பு பணங்கள் மீட்கப்பட்டவுடன் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

ஆனால், தற்போது வரை ஒரு சாமானியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக மத்திய அமைச்சா் ஒருவா் கூறுகையில், ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதி அளிக்கவில்லை என்று தொிவித்தாா். மற்றொரு அமைச்சா், நாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் எதிா்பாா்க்கவே இல்லை. ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்துதான் வாக்குறுதிகளை வழங்கினோம் என்று தொிவித்தாா்.

இதுபோன்ற குழப்பமான நிலையில் மத்திய இணைஅமைச்சா் ராம்தாஸ் அத்வாலே இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில், மத்திய ரிசா்வ் வங்கியில் போதிய நிதி இல்லாத காரணத்திலேயே இந்தியா்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வழங்கும் திட்டம் தாமதமடைந்துள்ளது. விரைவில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும்.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில தோ்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்ததைத் தொடா்ந்து கூட்டணி கட்சிகள் கவலை அடைந்துள்ளன. வரக்கூடிய நாடாளுமன்ற தோ்தலிலும் மோடியை முன்னிருத்தி பா.ஜ.க. போட்டியிடும். வரக்கூடிய தோ்தலில் சிவசேனா மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோா்க்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி