ஆப்நகரம்

ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.21,000 கோடி டெபாசிட்

பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.21,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 24 Nov 2016, 1:58 pm
புதுதில்லி: பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.21,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil rs 21000 crore deposited in jandhan yogan
ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.21,000 கோடி டெபாசிட்


பாமரருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் கடந்த 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் ஜன் தன் யோஜனா.

எல்.பி.ஜி. மாணியம் மற்றும் இதர ஊக்குவிப்புத் தொகைகள் போன்ற அரசாங்க திட்டங்களின் கீழ் தனிப்பட்ட நபர்களுக்கு கிடைக்கும் அனைத்து தொகைகளும் இந்த திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படுகின்றன. ஏற்கனவே வங்கிக் கணக்கு இல்லாத பெரும்பாலானோர் இந்த ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் வங்கிக் கணக்கை ஆரம்பித்து வந்தனர்.

இதனிடையே, மத்திய அரசு அறிவித்துள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமான தொகை, நமது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் தொகையை, புதிதாக தாங்கள் ஆரம்பித்த ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கில் பெரும்பாலானோர் டெபாசிட் செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதோரும் வங்கிக் கணக்கை ஆரம்பித்து டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னர், பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.21,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் இந்த திட்டத்தின் மூலம் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கருப்பு பணமாக இருக்கலாம் என கூறப்படுவதாலும், மத்திய அரசு இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rs.21,000 crore deposited in Jandhan yogan

அடுத்த செய்தி