ஆப்நகரம்

விவசாயிகள் அல்லாதோரின் ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; கொதித்தெழுந்த மம்தா!

வங்கிக் கடன் தொடர்பாக மத்திய அரசின் அறிக்கைக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 6:08 pm
டெல்லி: வங்கிக் கடன் தொடர்பாக மத்திய அரசின் அறிக்கைக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Bank Loan
வங்கிக் கடன் தள்ளுபடி


நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் ப்ரிஅதாப் சுக்லா எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கடந்த 2014 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரை பொதுத்துறை வங்கிகளில் ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவை செயல்பாடற்ற சொத்துக்கள் மீது கடன்கள், பல காலமாக திருப்பி செலுத்தப்படாத கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் கடனை திருப்பி செலுத்த வேண்டியது அனைவரின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நாடு முழுவதும் விவசாயிகள் வங்கி கடனால் கதறிக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கிறார்கள். தங்கள் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அதை நிறைவேற்றாத மத்திய அரசு, இதுபோன்ற தகவலை வெளியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. கடன் தகவல்களின் ரகசியம் காக்க வேண்டும் என்ற கருத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rs 24 Lakh Crore Loans Written Off In Over 3 Years.

அடுத்த செய்தி