ஆப்நகரம்

ஆட்டோ,டாக்ஸி, ஓட்டுனர்களின் வங்கி கணக்கில் ரூ.5000 செலுத்தப்படும் - அரசின் ஷாக் அறிவிப்பு

ஊரடங்கு விளைவாக வருமானம் இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு 5 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 5:40 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், முதல் போட்டு விவசாயம் செய்த விவசாயிகள் உட்பட பலரும் வருமானம் இழந்தும், தொழில் நஷ்டம் அடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு பல்வேறு வகையில் நிதி அறிவித்து வருகின்றன.
Samayam Tamil அரவிந்த் கெஜ்ரிவால்



இதில் டெல்லி அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு கவனடை ஈர்த்து வருகிறது. முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனவால் மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரிழக்க நேரிட்டால் இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

வீட்டுக்குள்ளேயே இருங்க மக்களே: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அதன் தொடர்ச்சியாக ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டிருக்கும் டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி & கிராமின் சேவா ஓட்டுனர்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படும் என சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைசெயல்படுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி