ஆப்நகரம்

தூய்மை இந்தியாவுக்கு ரூ.666 கோடி தனியார் நிதி!

தூய்மை இந்தியா திட்டத்துக்கு தனியார் நிதியாக ரூ.666 கோடி இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 22 Dec 2017, 9:19 am
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்துக்கு தனியார் நிதியாக ரூ.666 கோடி இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil rs 666 crore donated for swachh bharat mission since 2014 says govt
தூய்மை இந்தியாவுக்கு ரூ.666 கோடி தனியார் நிதி!


தூய்மை இந்தியா திட்டத்திற்கு பெறப்பட்டிருக்கும் நிதி தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களைவையில் எழுப்பபட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி நேற்று பதில் அளித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்திற்காக கடந்த 2014-15ஆம் ஆண்டு ரூ.15,961.19 லட்சம் நிதி பெறப்பட்டது. 2015-16ஆம் ஆண்டில் ரூ.25,324.64 லட்சம் நிதியும் 2016-17ஆம் ஆண்டில் ரூ.24,504.86 லட்சம் நிதியும் இதே வகையில் பெறப்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் இதுவரை ரூ.877.01 லட்சம் பெறப்பட்டுள்ளது. தனிநபர்களும் தனியார் நிறுவனங்களும் சமூகப் பொறுப்புணர்வு நன்கொடையாக இந்த பணத்தை அளித்துள்ளன.

மொத்தமாக இப்போது வரை கிடைத்துள்ள ரூ.666 கோடி தொகையில் ரூ.633.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி