ஆப்நகரம்

78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்!

போபால்: சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிற்கு பல்வேறு ஆலோசனைகளை ஆர்.எஸ்.எஸ் வழங்கியுள்ளது.

TIMESOFINDIA.COM 18 Oct 2018, 6:58 pm
மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் இன்னும் 6 வாரங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது பதவியில் இருக்கும் 78 பாஜக எம்.எல்.ஏக்களை ஒதுக்கி விடுமாறு அக்கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil Shivraj


மேலும் முதலமைச்சர் சிவராஜ் சிங்கை புத்னியில் போட்டியிட வேண்டாம் என்றும், போபாலின் கோவிந்த்புராவில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் கோவிந்த்புரா பாஜகவின் கோட்டை ஆகும்.

கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து 8 முறை முன்னாள் முதலமைச்சர் பாபுலால் கார் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பை எந்தவொரு பாஜக தலைவரும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட 78 எம்.எல்.ஏக்களும் மோசமாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில தேர்தல் மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யக்கூடியவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். வேறெந்த காரணியும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட யாரும் தேர்தலில் நிற்க அனுமதிக்க முடியாது என்று பாஜக உயர்மட்ட குழு கூறியுள்ளது. இந்த சூழலில் புத்னியில் சவுகானை வீழ்த்த மிகப்பெரிய போட்டியாளரை நிறுத்தப் போவதாக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RSS asks BJP to drop 78 MLAs weeks ahead of polls.

அடுத்த செய்தி