ஆப்நகரம்

அயோத்தி வழக்கு: நீதிமன்ற உத்தரவுக்கு ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு

அயோத்தி துணை வழக்கை வரும் அக்டோபர் 29ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 4:40 pm
அயோத்தி துணை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil akshay7


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் துணை வழக்காக, தொடர்ப்பட்ட மனு ஒன்றில் மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமிய வழிபாட்டுமுறையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி பூஷன் மற்றும் நீதிபதி அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க அவசியமில்லை என தெரிவித்திருக்கிறது.

வரும் அக்டோபர் 29ஆம் தேதி இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

“ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் அக்டோபர் 29ஆம் தேதி 3 நீதிபதிகள் அமர்வில் விசாரிப்பதாக அறிவித்துள்ளது. நாங்கள் இதனை வரவேற்கிறோம். மேலும் மிக விரைவில் இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என்பதில் உறுதியாக நம்புகிறோம்.” என ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி