ஆப்நகரம்

பாஜக எம்பி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்த ஜிக்னேஷ் தொண்டர்!

அகமதாபாத்: அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக எம்பிக்கு ஜிக்னேஷ் மேவானியின் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தது கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 8:01 am
அகமதாபாத்: அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக எம்பிக்கு ஜிக்னேஷ் மேவானியின் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தது கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பாஜக எம்பி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்த ஜிக்னேஷ் தொண்டர்!
பாஜக எம்பி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்த ஜிக்னேஷ் தொண்டர்!


அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக எம்பி கிரித் சொலங்கி மற்றும் சில பாஜக நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுயேச்சை எம்.எல்.ஏவான ஜிக்னேஷ் மேவானியின் தொண்டர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, கோஷமிட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி