ஆப்நகரம்

வாட்ஸ் ஆப்பில் வந்த வினை: ஏழு பேரை அடித்தே கொன்ற மக்கள்!

வாட்ஸ் ஆப் மூலம் பரவிய வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 பேரை பொது மக்கள் அடித்து கொன்றனர்.

TOI Contributor 23 May 2017, 7:34 pm
வாட்ஸ் ஆப் மூலம் பரவிய வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 பேரை பொது மக்கள் அடித்து கொன்றனர்.
Samayam Tamil rumours through whatsapp people killed 7 youth
வாட்ஸ் ஆப்பில் வந்த வினை: ஏழு பேரை அடித்தே கொன்ற மக்கள்!


ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் பகுதியில் கடந்த சில தினங்களாக குழந்தை கடத்தல் கும்பல் உலவி வருவதாகவும், அவர்கள் குழந்தைகளின் கை கால்களை வெட்டி எடுத்து விடுவதாகவும் வாட்ஸ் அப்பில் பரவி வந்தது. அதில் சிலரின் புகைப்படங்களும் பரப்பபட்டு வந்தது.

இந்நிலையில் சிங்புவை சேர்ந்த சில இளைஞர்கள், வாட்ஸ் அப் புகைப்படங்களில் வந்தவர்களைப் போன்று இருந்த காரணத்தால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் விகாஸ் குமார் வெர்மா, கௌதம் குமார் வெர்மா, மற்றும் கணேஷ் குப்தா ஆகிய மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதேபோல மற்றொரு இடத்தில் நடந்த இரண்டாவது சம்பவத்தில் நான்கு பேர் அடித்து கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறை ஐ.ஜி ஆசிஷ் பாத்ரா கூறுகையில்’, வாட்ஸ் அப்பில் பரவி வந்த வதந்தியை மக்கள் நம்பியுள்ளனர். அந்த புகைப்படத்தில் இருந்த இளைஞர்களைப்போல இவர்களும் இருந்த காரணத்தால் தாக்குதல் நடந்துள்ளது.

அதனால் வாட்ஸ் அப்பில் வரும் விஷயங்களை முழுமையாக நம்ப வேண்டாம் என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தவிர, இந்த வாட்ஸ் அப் வதந்தி முதலில் எங்கு இருந்து துவங்கியது என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்றார்.

அடுத்த செய்தி