ஆப்நகரம்

எஸ்.ஐ.வில்சன் கொலை: மகாராஷ்டிராவிலிருந்து துப்பாக்கி... தேடப்பட்ட இருவரும் கைது

வில்சனை சுட்டுக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதும் தெரியவந்தது.

Samayam Tamil 14 Jan 2020, 4:20 pm
சார் ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத இரு நபர்களால் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டது கடந்த வாரம் முழுக்க பெரும் பரபரப்பாக இருந்தது.
Samayam Tamil s i wilson murderers arrested in karnataka uduppi
எஸ்.ஐ.வில்சன் கொலை: மகாராஷ்டிராவிலிருந்து துப்பாக்கி... தேடப்பட்ட இருவரும் கைது


உடாற்கூறாய்வு அறிக்கையின் தகவல்களின்படி, எஸ்.ஐ. வில்சனின் கொலை திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பது நிரூபனமானது. மேலும் இவரைக் கொலை செய்வதற்கான திட்டம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தீட்டப்பட்டு உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கூடுதல் தகவலாக, வில்சனை சுட்டுக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவிய 9 பேரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், குற்றவாளிகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தௌஃபிக், ஷமீம் என்பதும் தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் இருவரும் நெய்யாற்றின் கரை வழியாகத்தான் கேரளாவுக்கு நடந்துசென்றுள்ளனர் என்பதையும் காவல்துறை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், தவுபீக், ஷமீம் ஆகிய இருவரையும் இன்று உடுப்பியில் போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல திட்டம் இடப்பட்டிருந்த நிலையில், குற்ற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார்?, இதற்குப் பின்புலம் என்ன? உள்ளிட்ட தகவல்கள் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

அடுத்த செய்தி