ஆப்நகரம்

Amit Shah: இவர்கள் எல்லாம் புதுமுகங்கள்; அமைச்சரவையில் புது ரத்தம் பாய்ச்சிய பிரதமர் மோடி!

நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட மோடியின் அமைச்சரவையில் புது முகங்கள் யார் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 31 May 2019, 8:44 am
17வது மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய அரசு நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Samayam Tamil Modi Cabinet1


மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 9 பேருக்கு தனிப்பொறுப்பு அந்தஸ்து, 24 இணையமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் 21 புதுமுகங்களுக்கு மோடி வாய்ப்பு அளித்துள்ளார்.

அவர்களில் 6 பேருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பும், 14 பேருக்கு இணையமைச்சர் பொறுப்பும், ஒருவருக்கு தனிப் பொறுப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மத்திய அமைச்சர்கள்:

அமித்ஷா,
ஜெய்சங்கர்,
ரமேஷ் போக்ஹிரியால் ‘நிஷாங்க்’
அர்ஜூன் முண்டா,
பிரல்ஹாத் ஜோஷி,
மகேந்திர நாத் பாண்டே,
அர்விந்த் சாவந்த்

புதிய இணையமைச்சர்கள்:

தான்வே ராவோசாஹிப் தாதரோ,
ஜி கிஷன் ரெட்டி,
சஞ்சய் ஷாம்ராவ் தாத்ரே,
அனுராக் தாகூர்,
அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா,
நித்யானந்த ராய்,
ரத்தன் லால் கதாரியா,
ரேணுகா சிங்,
சோம் பிரகாஷ், தேமோஸ்ரீ,
ரமேஷ்வர் தேலி,
கைலாஷ் சவுத்ரி,
பிரதாப் சாரங்கி,
வி முரளீதரன்

புதிய தனிப்பொறுப்பு அந்தஸ்து:

பிரஹ்லாத் சிங் படேல்

நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 58 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 54 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் ஷிரோன்மணி அகாலி தளம், லோக்தந்திரிக் ஜனதா கட்சி, சிவ சேனா, ரிபப்ளிகன் பார்டி ஆப் இந்தியா(ஏ) ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அடுத்த செய்தி