ஆப்நகரம்

சபரிமலை: ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (டிசம்பர் 26) மண்டல பூஜை நடைபெறுகிறது.

Samayam Tamil 26 Dec 2020, 9:19 am
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Sabarimala


வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் குறைவான எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கு இது கட்டாயம்: தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!
ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி டிசம்பர் 22ஆம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

நேற்று (டிசம்பர் 25) மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இன்று (டிசம்பர் 26) மதியம் மண்டல பூஜைக்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சுதாகரன் விடுதலையில் சசிகலா ஆடும் அரசியல் கேம்!

வழக்கமான பூஜைகள் நடந்த பின் இன்று இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அடுத்ததாக மகர விளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி