ஆப்நகரம்

சபரிமலையில் அக்.18ம் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி..??

பெண்களை அனுமதிப்பது குறித்து அக்டோபர் 18ம் தேதி அறிவிப்பு வெளியிடும் சபரிமலை தேவஸ்தானம்

Samayam Tamil 30 Sep 2018, 1:01 pm
சபரிமலையில் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் பெண்களை அனுமதிக்க ஐயப்பன் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil sabrimalatem-1538287619
அக்.18ம் தேதி முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி..!!


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களை அனுதிக்க கூடாது என்ற பழக்கத்தை திருவாங்கூா் தேசவம் போா்டு கடைபிடித்து வருகிறது.

இதை எதிர்த்து சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என பல அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு அரசியல் சாசன அமா்விற்கு மாற்றம் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் குழு கொண்ட அமர்வு நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் 3-ஆம் தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

அப்போது வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சபரிமலைக்குள் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் முடிவெடுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி