ஆப்நகரம்

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி? உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு தேவசம் போா்டு பின்பற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீா்ப்பு வெளியாகிறது.

Samayam Tamil 28 Sep 2018, 10:01 am
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு எதிராக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்குகிறது.
Samayam Tamil Sabarimala


கேரளாவில் உள்ள சபரிமரை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது. கேரளா மாநில தேவசம் போா்டு இந்த நடைமுறையை நீண்டகாலமாக பின்பற்றி வருகிறது. இதற்கு எதிா்ப்பு தொிவித்து இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கள் செய்திருந்தன.

இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அரசியல் சாசன அமா்விற்கு மாற்றம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆா்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தொடா்ச்சியாக 8 நாள்கள் விசாரணை மேற்கொண்டது.

இதனைத் தொடா்ந்து மனுக்கள் மீதான தீா்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனா். பின்னா் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமா்வு தனது தீா்ப்பை இன்று வெளியிடுகிறது.

அடுத்த செய்தி