ஆப்நகரம்

சல்மான் கான் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 9 Jan 2017, 4:21 pm
ஜோத்பூர்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil salman khan arms act case verdict on jan18
சல்மான் கான் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு


கடந்த 1998-ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்ற சல்மான் கான், அரியவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, உரிமம் காலாவதியான துப்பாக்கியை சல்மான் கான் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக ஆயுத சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரானையின் இரு தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து, வருகிற 18-ம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் சல்மான் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சுமார் 7 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Salman Khan Arms act case: Verdict on Jan18

அடுத்த செய்தி