ஆப்நகரம்

சல்மான் கானை அடித்து உதைப்பவா்களுக்கு பரிசுத் தொகை

நடிகா் சல்மான் கானை அடித்து உதைப்பவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனறு இந்து அமைப்பின் நிா்வாகி தொிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jun 2018, 6:12 pm
நடிகா் சல்மான் கானை அடித்து உதைப்பவா்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனறு இந்து அமைப்பின் நிா்வாகி தொிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Salman Khan


பாலிவுட் நடிகா் சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ்ராத்ரி திரைப்படம் அக்டோபரில் நவராத்திாி பண்டிகை தினத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஹிந்து ஹி ஆகேவின், ஆக்ரா நகர தலைவா் கோவிந்த் பராஷா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, இந்துகளால் கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகையை இழிவு படுத்தும் வகையில் லவ்ராத்ரி என சல்மான்கான் தயாரிப்பில் உருவான படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

லவ்ராத்ரி படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடத்துவோம். லவ்ராத்ரி படத்தை திரையிடும், தியேட்டா்களை தீயிட்டு கொளுத்துவோம். இந்துகள் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.

இவரது கருத்தால் சல்மான் கான் ரசிகா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி