ஆப்நகரம்

பாஜகவில் தொடர் விக்கெட்.. கலக்கத்தில் யோகி.. கலாய்க்கும் அகிலேஷ் யாதவ்

பாஜகவில் தொடர்ந்து விக்கெட் விழுந்து வரும் நிலையில் முதல்வர் யோகியை கலாய்த்த அகிலேஷ் யாதவ்.

Samayam Tamil 14 Jan 2022, 11:29 pm
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, யாரும் எதிர்பாரா வகையில் பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரிசையாக சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ளனர்.
Samayam Tamil Yogi - Akhilesh


இதுவரை பாஜகவில் இருந்து இரண்டு அமைச்சர்களும், ஆறு எம்.எல்.ஏக்களும் பாஜக கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ளனர். இதுமட்டுமல்லாமல், பாஜக கூட்டணியில் உள்ள அப்னா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் சமாஜ்வாதிக்கு தாவியுள்ளார்.

இதில் சமாஜ்வாதியில் இருந்து தாவியவர்கள் பெரும்பாலும் ஓபிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) தலைவர்களாகவே உள்ளனர். இதுமட்டுமல்லாமல், இன்னும் சுமார் 50 பேர் பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாதியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரி டூ மோடியின் தளபதி.. யார் இந்த ஏ.கே.ஷர்மா?
ஆக, பாஜகவில் ஓபிசி தலைவர்களின் கலகக் குரல் எழுந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பாஜக ஒன்றன் பின் ஒன்றாக விக்கெட்டுகளை இழப்பதாகவும், சமாஜ்வாதியின் உத்தியை பாஜகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ், “பாஜக விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துகொண்டிருக்கின்றன. நமது பாபா (சாமியார்) முதல்வருக்கு கிரிக்கெட் கூட விளையாடத் தெரியாது. அப்படி விளையாட தெரிந்திருந்தால் கேட்ச் பிடிக்காமல் விட்டிருக்கமாட்டார்” என்று கலாய்த்துள்ளார்.

அடுத்த செய்தி