ஆப்நகரம்

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கிற்கு கொரோனா - உடல்நிலை எப்படி இருக்கிறது?

முலாயம் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Oct 2020, 5:45 am
உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை பலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ். இவர் மூன்று முறை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஹெச்.டி தேவகவுடா பிரதமராக இருந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவரது வயது 80. எனவே அதிக ஆபத்துள்ள நோயாளிகளின் பட்டியலில் முலாயம் சிங் வருகிறார். ஆகையால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு தேவை. இவருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Mulayam Singh Yadav


இதனை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளனர். முலாயம் சிங் யாதவிற்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட உடன், மருத்துவர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை.

உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவிக்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுநீரகத் தொற்று காரணமாக மேதாந்தா மருத்துவமனையில் முலாயம் சிங் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் வெங்கையா நாயுடு!

அப்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முலாயம் சிங் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. சர்வதேச அளவில் சுமார் 4 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 62 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி