ஆப்நகரம்

சாம்பார் தென் இந்திய உணவு இல்லையாம்!

மராட்டியப் பேரரசர் சிவாஜியின் மகன் பெயரால் அழைக்கப்பட்ட சம்பாஜிதான் சாம்பார் என்று மாறிவிட்டது என்கிறார் சமையல் கலைஞர் குனல் கபூர்.

Samayam Tamil 17 Oct 2018, 2:44 pm
சாம்பார் தென் இந்திய உணவு இல்லை என்றும் அதனை முதலில் சமைத்தது மகாராஷ்டிராவில்தான் என்றும் பிரபல சமையல் கலைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
Samayam Tamil sambar


சமையல் கலைஞர் குனல் கபூர் பல இடங்களுக்கு பயணம் செய்து அந்தந்த ஊர்களில் ஸ்பெஷலான உணவு வகைகளைச் சமைத்து புகழ்பெற்றவர்.

மாஸ்டர்செஃப் இந்தியா சமையல் போட்டியில் நடுவராகவும் இருந்தவர். இவரது புதிய டிவி நிகழ்ச்சி இந்தியாவில் சமைக்கப்படும் கறிகளை மையமாகவைத்து ஒளிபரப்பாகிவருகிறது.

இதில், துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் செய்துகாண்பித்த குனல் கபூர், “சாம்பார் தென் இந்தியாவின் உணவு என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மராட்டியர்களால்தான் முதல் முதலாக சமைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

“இது பற்றி பல கதைகள் உள்ளன. மராத்தா ஆட்சியில் முதலில் சமைக்கப்பட்ட சாம்பாருக்கு அப்போது தங்கள் அரசனான சம்பாஜியின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.” என்றும் அவர் கூறினார். சம்பாஜி மராட்டியப் பேரரசர் சிவாஜியின் மகன் ஆவார். அவரது பெயரால் அழைக்கப்பட்ட சம்பாஜிதான் சாம்பார் என்று மாறிவிட்டது என்கிறார் குனல் கபூர்.

மிளகளாயை சமையலில் சேர்ப்பதையும் முதல் முதலில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களே அறிமுகம் செய்தார்கள் என்றும் போர்ச்சுகீசயர்களுக்குச் மிளகாய் போட்டு காரமான உணவை செய்துகாட்டினார்கள் என்றும் ஒரு வழக்கு உள்ளது.

அடுத்த செய்தி