ஆப்நகரம்

குஜராத் வரும் ட்ரம்ப்புக்கு ஸ்நாக்ஸ் ரெடி... சமோசா,காஜு கட்லி இன்னும் என்னென்ன தெரியுமா?

​​இத்துடன் ஆங்கில மரபைச் சேர்ந்த ஜூஸ், குக்கீஸ், மற்றும் ரொட்டிகள் ஆகியவையும் இந்த உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 24 Feb 2020, 11:39 am
இந்தியாவிற்கு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வரவேற்பு உணவாக குஜராத்தி முறை உணவு வழங்கப்பட இருக்கிறது.
Samayam Tamil samosa chai and some will be provided to trump and his delegates
குஜராத் வரும் ட்ரம்ப்புக்கு ஸ்நாக்ஸ் ரெடி... சமோசா,காஜு கட்லி இன்னும் என்னென்ன தெரியுமா?


கமன் தோக்லா, சமோசா மற்றும் கடக் சாயா ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது. ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் , உடன்வரும் 100 பேருக்கும் தேநீருடன் இவை வழங்கப்பட இருக்கின்றன.

சபர்மதி ஆசிரமத்தில் வைத்து இந்த சிற்றுண்டி வரவேற்பு நடைபெற இருக்கிறது. குஜராத்திய உணவுகளான, காஜு கட்லி, சாய், ப்ரொக்கோலி, சோளம், சமோசா, கமன் தோக்லா, ஆகியவை இந்தப் பட்டியலில் அடக்கம்.



இத்துடன் ஆங்கில மரபைச் சேர்ந்த ஜூஸ், குக்கீஸ், மற்றும் ரொட்டிகள் ஆகியவையும் இந்த உணவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Namaste Trump : "பாகுபலி" டிரம்ப் இந்தியா விசிட் - வைரலாகும் மீம்ஸ்கள்...

இந்த உணவுப் பட்டியலுக்கு குஜராத் சுற்றுலாத்துறையினர் சார்பில் ஒப்புதல் வழஙகப்பட்டுள்ளது என்கிறார் அஹமதாபாத்தில் உள்ள ஃபார்ச்சூன் லேண்ட் மார்க் தங்கும் விடுதியின் சமையற்கலைஞரான சுரேஷ் கண்ணா.


மேலும், குஜராத் முழுக்க தற்போது வெயில் அதிகரித்து வருவதால், அதையும் கவனத்தில் கொண்டு உணவில் உருளைக்கிழங்கும், வெண்ணெயும் சேர்ப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி