ஆப்நகரம்

சானிட்டரி நாப்கின் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சானிட்டரி நாப்கின் உற்பத்தியாளர்கள் அதனை அகற்றுவதற்கான பேட்களை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 9 Mar 2020, 1:19 am
புனே: சானிட்டரி நாப்கின் உற்பத்தியாளர்கள் அதனை அகற்றுவதற்கான பேட்களை கட்டாயம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இன்றைய காலகட்டத்தில் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். பெண்கள் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.

நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து கொள்வதை விட அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியமானதாகும். உபயோகிக்கப்பட்ட நாப்கின்கள் பேப்பரில் சுற்றப்பட்டு மற்ற பொருட்களின் நடுவில் குப்பை தொட்டிகளில் வீசப்படுகின்றன.

நாட்டை விட்டு வெளியேற முயன்ற யெஸ் வங்கி நிறுவனரின் மகள்; தடுத்து நிறுத்திய போலீசார்

ஆனால், இவை ஏற்படுத்தும் விளைவுகள் ஏராளாம். உபயோகிக்கப்பட்ட நாப்கின்களை குப்பை தொட்டியில் இருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அவற்றை எரித்துச் சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது நல்லது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்நிலையில், புனேவில் சுகாதார ஊழியர்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சானிட்டரி நாப்கின் உற்பத்தியாளர்கள் அதனை அகற்றுவதற்கான பேட்களை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு ஏற்கனவே உள்ளது. ஆனால், அதனை உற்பத்தியாளர்கள் பின்பற்றுவதில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனக்கே பிறப்பு சான்றிதழ் கிடையாது: சட்டப்பேரவையில் தெலங்கானா முதல்வர் காட்டம்

நகரவாசிகள் அனைவரும் தங்களுக்கு குப்பை தொட்டி வேண்டும் என்கிறார்கள். ஆனால், அந்த தொட்டிகள் அவர்களது வீட்டின் அருகே இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும் என தெரிவித்த ஜவடேகர், சானிட்டரி நாப்கின்கள், டயாப்பர்கள் உள்ளிட்டவைகளின் உற்பத்தியும், உபயோகமும் அதிகரித்து விட்டது. ஆனால், அவை அப்புறப்படுத்தப்படும் விதம் சுகாதார ஊழியர்களுக்கு கேடு விளைவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி