ஆப்நகரம்

சல்மான் கான் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை - சஞ்சை தத்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிறைக்கு செல்லவதை தான் விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் சஞ்சை தத் கூறியுள்ளார்.

TOI Contributor 30 Jul 2016, 2:41 pm
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிறைக்கு செல்லவதை தான் விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் சஞ்சை தத் கூறியுள்ளார்.
Samayam Tamil sanjay dutt i would never want salman khan to go to jail
சல்மான் கான் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை - சஞ்சை தத்


தனது 57வது பிறந்தநாளை கொண்டாடும் சஞ்சை தத் ,இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நானும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் சிறந்த நண்பர்கள். இன்று காலையில் அவர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவர் என்னுடைய தம்பி போன்றவர். அவருக்கு இறைவன் இன்னும் பல வெற்றிகளை கொடுப்பார். சல்மானுக்கும் எனக்கு பிரச்சை என யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்குள் எந்த வித சண்டையும் இல்லை.

மான் வேட்டையாடிய வழக்கிலிருந்து சல்மான் கானை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் சல்மான் கான் உள்ளிட்ட யாரும் சிறைக்கு செல்வதை தான் விரும்பவில்லை" என சஞ்சை தத் கூறினார்

அடுத்த செய்தி