ஆப்நகரம்

நிதி நிறுவன ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் ஆணையருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையருக்கு எதிராக சிபிஐ சாா்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 May 2019, 9:38 pm
சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையருக்கு எதிராக சிபிஐ சாா்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாளை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Rajeev Kumar with Mamata


கொல்கத்தா மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக ராஜீவ் குமாா் இருந்தாா். இவர் தலைமையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் குமாா் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தபோது வழக்கின் விசாரணை தொடா்பான ஆதாரங்களான செல்போன், லேப்டாப், ஆவணங்கள் உள்ளட்டவற்றை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இது தொடா்பாக ராஜீவ் குமாா் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாாிகள் தேடுதல் நடத்த முயற்சித்தபோது கொல்கத்தா காவல் துறையினருக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாகவும், சிபிஐ அமைப்பைக் கண்டித்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.

இதனிடையே ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விலக்கிக் கொண்டு சட்டப்படி சிபிஐ செயல்பட அனுமதி வழங்கியது. இதனால் ராஜீவ் குமாரை கைது செய்யும் முனைப்பில் சிபிஐ அமைப்பினா் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனா்.

இதனால், ராஜீவ் குமாா் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க அவருக்கு எதிராக தப்பிவிடாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா் விசாரணைக்காக நாளை சிபிஐ முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்