ஆப்நகரம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மதன் மித்ராவுக்கு ஜாமீன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 9 Sep 2016, 6:31 pm
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மேற்குவங்க மாநில முன்னாள் அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil saradha scam trinamool congress madan mitra granted bail
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மதன் மித்ராவுக்கு ஜாமீன்


மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மதன் மித்ரா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, பல முறை மதன் மித்ராவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை நடத்திய அம் மாநிலத்தின் அலிப்பூர் நீதின்றம் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ரூ.30 லட்சத்திற்கான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. எனவே, ஜாமீன் நடைமுறைகளுக்கு பின்னர், அலிப்பூர் மத்திய சிறையில் இருந்து அவர் விரைவில் விடுவிக்கப்பட்டு வெளிவருவார் என தெரிகிறது.

அடுத்த செய்தி