ஆப்நகரம்

ஸ்டேட் பேங்க் கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடு மாற்றம்!

பாரத ஸ்டேட் பேங்க் தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றியுள்ளது.

TOI Contributor 11 Dec 2017, 4:59 am
புதுடெல்லி: பாரத ஸ்டேட் பேங்க் தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றியுள்ளது.
Samayam Tamil sbi changes 1300 bank names ifsc codes find out yours
ஸ்டேட் பேங்க் கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி குறியீடு மாற்றம்!


வங்கி கிளைகளை அடையாளம் காண வசதியாக ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ஐ.எப்.எஸ்.சி குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் பாரத ஸ்டேட் பேங்க், தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றியுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இது வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SBI Changes 1,300 Bank Names, IFSC Codes. Find Out Yours

அடுத்த செய்தி