ஆப்நகரம்

INX Media Case: ப்ளீஸ் ஜெயில் வேண்டாமே; உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வாதம்!

சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு விசாரணையில், ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் அடைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Sep 2019, 3:30 pm
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருக்கிறார். கடந்த 21ஆம் தேதி, கைதான நிலையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
Samayam Tamil P.Chidambaram


இந்த சூழலில் சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஆஜரான சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆகிறது.

குட் நியூஸ் - சந்திராயன் 2 : நிலவை ஆராயும் லேண்டர் ''விக்ரம்'' பிரியும் பணி தொடக்கம்

இந்த சூழலில் அவரை திகார் சிறையில் அடைக்க வேண்டாம். விசாரிக்க வேண்டுமானால், வீட்டுக் காவலில் வைக்கலாம். நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட வேண்டாம். ஏனெனில் அடுத்த சில நாட்களில் இந்த உலகம் தலைகீழாக மாறி விடப் போவதில்லை என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து வாதிட்ட சிபிஐ தரப்பு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவற்றைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மாமல்லபுரம் வருகிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.! பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்கும் கோரிக்கை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம். ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இதன்மூலம் ஐ.என்.எக்ஸ் முறைகேட்டு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

''விநாயகர் சதுர்த்தி'' நாட்டு மக்களுக்கு பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து.!

அடுத்த செய்தி