ஆப்நகரம்

காவிரி வழக்கு சரியாக விளங்கவில்லை; குழம்பிப் போன உச்சநீதிமன்றம்!

காவிரி வழக்கை புரிந்து கொள்ள சிரமமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TNN 14 Sep 2017, 12:15 pm
டெல்லி: காவிரி வழக்கை புரிந்து கொள்ள சிரமமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil sc confused in cauvery case
காவிரி வழக்கு சரியாக விளங்கவில்லை; குழம்பிப் போன உச்சநீதிமன்றம்!


தமிழக, கர்நாடக இடையே நிலவி காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை தற்போது நடைபெறுகிறது.

நேற்று 24ஆம் நாளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் புதுச்சேரி மாநில அரசு தமது வாதத்தை நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு முன்வைத்த வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக அரசு வாதத்தை தொடங்கியது.

இந்த வாதத்தில், கடந்த 1924ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டதை சுட்டிக் காட்டினர். இதனை புதுப்பிக்க கர்நாடக அரசின் ஒப்புதல் தேவை என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு கூறியது. இருப்பினும் புதிய ஒப்பந்தம் போடப்படும் வரை, 1924ஆம் ஆண்டு ஒப்பந்தமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி வழக்கை புரிந்து கொள்ள சிரமமாக இருப்பதாக கூறி, வழக்கை இன்று ஒத்திவைத்தது.

SC confused in Cauvery case.

அடுத்த செய்தி