ஆப்நகரம்

நீதிபதிகளுக்கு ‘நல்ல’ சம்பள உயர்வு உறுதி: மத்திய அரசு

நீதிபதிகளுக்கான சம்பளத்தை உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 22 Nov 2017, 6:41 pm
நீதிபதிகளுக்கான சம்பளத்தை உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil sc hc judges salary hike approved by cabinet
நீதிபதிகளுக்கு ‘நல்ல’ சம்பள உயர்வு உறுதி: மத்திய அரசு


அண்மையில் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுவரும் அகவிலைப்படி 139 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முன்தேதி இட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் நீதிபதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை மாற்றி ஏழாவது ஊதிக்கழு பரிந்துரைப்படி நீதிபதிகள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டது.

இந்த மனுவை இன்று மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கான சம்பளத்தை படிகள் நீங்கலாக மாதத்துக்கு ரூ.2.8 லட்சமாக உயர்த்துவது என்றும் மற்ற நீதிபதிகளின் சம்பளத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்துவது என்றும மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு ரூ.2.5 லட்சமும் மற்ற நீதிபதிகளுக்கு ரூ.2.25 லட்சமும் சம்பளத்தை உயர்த்தவும் பரீசலிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி