ஆப்நகரம்

Justice Chelameswar: செல்லமேஸ்வர்க்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம்

ஓய்வுப்பெற்ற பின் செல்லமேஸ்வர் ஊடகங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Jun 2018, 11:12 am
ஓய்வுப்பெற்ற பின் செல்லமேஸ்வர் ஊடகங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil New Delhi: Supreme Court judge Justice Jasti Chelameswar during the launch of th...
Supreme Court judge Justice Jasti Chelameswar during the launch of the book "Supreme Court of India- The Beginnings", authored by Vikram Raghavan and Vasujith Ram, in New Delhi on Monday.Photo by Kamal Kishore


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் செல்லமேஸ்வர். இவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் பணியற்றுவதை தவிர்த்து நீதிபதி சஞ்சய் கவுல் அமர்வில் பணியாற்றி வந்தார். இவர் நீதிபதியாக இருந்த போது பல சர்ச்சைக்குரிய வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பளித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர். மேலும், இந்திய வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியில் இருக்கும் போதே, செய்தயாளர்களைச சந்தித்து, நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த 22ம் தேதி அவர் பணி நிறைவு பெற்றார்.

இந்நிலையில், செல்லமேஸ்வரர், ஒய்வு பெற்ற பின் ஊடகங்களில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பார் கவுன்சலின் தலைவர் மேனன் மிஸ்ரா சார்பில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஐ தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவை சந்தித்தையும் பார் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த செய்தி